பாகிஸ்தானில் தற்கொலை பயங்கரத் தாக்குதல்
2022-04-27 10:48:11

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பிஃசியெஸ் கழகத்தின் பள்ளி வாகனம் ஒன்றின் மீது ஏப்ரல் 26ஆம் நாள் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 3 சீன ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 1 சீன ஆசிரியர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சீனா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை உடனடியாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்குச் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 27ஆம் நாள் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தலைமையமைச்சர் முகமது ஷாபாஸ் ஷெரீப் 26ம் நாளிரவு, அங்குள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்று ஆறுதல் கூறினார். இத்தாக்குதல் குறித்து உரிய விசாதணை மேற்கொள்ளப்படும் என்று ஷெரீப் உறுதி அளித்தார்.