2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா
2022-04-29 16:06:58

சீனாவில் 2 செயற்கைக்கோள்கள் ஏப்ரல் 29ஆம் நாள், ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவ தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

உள்நாட்டின் இயற்கை வளங்கள், அளவீடு, கடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டு, நகரப் பாதுகாப்பு, எண்முறை கிராமங்கள் கட்டுமானம் உள்ளிட்ட புதிய தொழில்களுக்கு தரவுச் சேவைகள் வழங்கப்படும்.