ரஷிய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை அரசுசார் நிறுவனங்கள் வாங்க இந்தியா ஆலோசனை
2022-04-29 16:09:16

ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களில் இருந்து ரஷிய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது தொடர்பான சாத்தியங்களை மதிப்பீடு செய்யுமாறு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம் 5 அரசுசார் எரிசக்தி நிறுனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ரஷிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நிஃபிட்டின் 19.75 விழுக்காட்டு பங்குகளை கைவிடுவதாக பீ.பி. நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 400 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்களில் இருந்து வெளியேறுவதாகவும், ரஷியாவில் சக்காலின்-1 உள்பட அனைத்து இயக்கங்களையும் நிறுத்துவதாகவும் எக்ஸான் மொபைல் நிறுவனம் மார்ச் முதல் நாள் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, உலகின் 3வது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக திகழ்கிறது. நாள்தோறும் 50லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்களில், 85 விழுக்காடு இறக்குமதியை சார்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.