கடல் சட்டம் பற்றிய ஐ.நா உடன்படிக்கையின் மீதான விளக்கம்
2022-04-30 17:35:54

கடல் சட்டம் பற்றிய ஐ.நா பொது இணக்க உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 29ஆம் நாள் நடைபெற்ற உயர் நிலைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் துணை பிரதிநிதி தை பிங் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

இவ்வுடன்படிக்கை, முழுமையான நவீனக் கடல் சட்டம் அல்ல. பல்வேறு தரப்புகள், மேலும் நல்லிணக்கமாகவும் சரியாகவும், முழுமையாகவும் இவ்வுடன்படிக்கையைப் புரிந்து கொண்டு, பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதில் கையொப்பமிட்ட சீனா, இவ்வுடன்படிக்கையை உறுதியாகப் பேணிக்காத்து, இவ்வுடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச கடல் சட்டங்களைப் பின்பற்ற பாடுபட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.