பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சீனர்களுக்கு பாகிஸ்தான் அரசுத் தலைவர் அஞ்சலி
2022-05-01 16:51:01

பாகிஸ்தான் அரசுத் தலைவர் அல்வி ஏப்ரல் 30ஆம் நாள் அந்நாட்டிலுள்ள சீனத் தூதரகத்துக்குச் சென்று, கராச்சி பல்கலைக்கழகத்தின் பள்ளி வாகனம் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சீனர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாகிஸ்தான் மக்களின் சார்பில் உயிரிழந்த சீனர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும் சீனத் தலைவர்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்களுக்கு மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிப்பதாகவும், இப்பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்துக்கு, சகோதரர் போன்ற சீனாவின் ஆதரவு இன்றியமையாதது. பாகிஸ்தானிலுள்ள சீன மக்கள் மற்றும் சீன நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாகிஸ்தான்-சீன உறவை சீர்குலைக்க முயலும் அனைத்து சதிகளையும் தோற்கடிக்கவும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுமூச்சுடன் ஒடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.