திபெத்தில் பார்லி பயிரிடுதல் தொழிலின் வளர்ச்சி
2022-05-02 15:26:57

2021ஆம் ஆண்டின் இறுதிவரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பார்லி பயிரிடுதல் பரப்பளவு சுமார் 14 லட்சத்து 667 ஹெக்டரை எட்டியது. 8 லட்சத்து 1200 டன் பார்லி விளைச்சலின் உற்பத்தி மதிப்பு 320 கோடி யுவானுக்கு மேலாகும். நாடளவில் பார்லி பயிரிடுதல் பரப்பளவு, விளைச்சல் மற்றும் உற்பத்தி மதிப்பில், இவை முறையே 47.91, 61.54 மற்றும் 61.42 விழுக்காடு வகிக்கின்றன.

திபெத் வேளாண்மை மற்றும் ஊரக விவகாரப் பணியகத்தில் கிடைத்த தகவலின்படி, கடந்த சில ஆண்டுகளாக பார்லி தொழிலின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் திபெத், இத்தொழிலை பீடபூமியின் மேம்பாட்டுடைய சிறப்பு தொழிலாகவும் தொழில் வளர்ச்சியை முன்னேற்றும் முக்கியத் துறையாகவும் கொண்டு, கொள்கை ரீதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவை வலுப்படுத்தி வருகிறது. தற்போது திபெத்தில் 53 பார்லி பதனீட்டு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் ஆண்டு பதனீட்டு அளவு 1.59 லட்சம் டன்னையும் ஆண்டு பதனீட்டு மதிப்பு 115.7 கோடி யுவானையும் எட்டியுள்ளது. அதோடு, 60க்கும் மேற்பட்ட வணிகச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.