அமெரிக்காவில் கரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுப்பிடிப்பு
2022-05-03 16:38:30

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, ஓமிக்ரான்-BA.2 என்னும் கரோனா வைரஸின் திரிபு தற்போது அமெரிக்காவில் முக்கியாக பரவி வருகிறது என்ற போதிலும், ஓமிக்ரான்-BA.2.12.1 என்னும் புதிய திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வேகமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து கொள்ளை நோயியல் நிபுணர்கள் கூறுகையில், கரோனா வைரஸ் புதிதாகத் திரிபடையும் வேகம் குறையவில்லை. இந்நிலையில், தொற்று அளவு தொடர்ச்சியாக அதிகரிக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தனர்.