கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான தானியங்கி வானிலைக் கண்காணிப்பு நிலையம் உருவாக்கம்
2022-05-04 16:02:30


ஜொல்மோ லுங்மா சிகரத்துக்கான சீனாவின் புதிய அறிவியல் ஆய்வு நடவடிக்கையைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் மே 4ஆம் நாள் சிகரத்தில் ஏறினர்.

மேலும், கடல் மட்டத்திலிருந்து 8830 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்தில், தானியங்கி வானிலைக் கண்காணிப்பு நிலையத்தை அவர்கள் முற்பகல் 12 மணி 46 நிமிடங்கள் வெற்றிகரமாக நிறுவினர். உலகளவில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான தானியங்கி வானிலைக் கண்காணிப்பு நிலையமாகவும், நடப்பு அறிவியல் ஆய்வு நடவடிக்கையில் உருவாக்கப்பட்ட கடைசி வானிலைக் கண்காணிப்பு நிலையமாகவும் இது திகழ்கிறது.