கிராமப்புறத்தில் நீர் வினியோகத் திட்டப்பணி
2022-05-05 18:29:23

இவ்வாண்டின் முதல் காலாண்டில் கிராமப்புற நீர் வினியோகத் திட்டப்பணிக்கு சீனா 1540 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்து, 42 லட்சத்து 90 ஆயிரம் கிராமப்புற மக்களுக்கான நீர் வினியோக உத்தரவாத நிலையை உயர்த்தியுள்ளது. சீன நீர்வள அமைச்சகத்திலிருந்து 5ஆம் நாள் கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வாண்டின் இறுதிக்குள் கிராமப்புறங்களில் குழாய் நீர் பயன்பாட்டு விகிதம் 85 விழுக்காட்டை எட்டும் என்றும், பெருமளவிலான நீர் வினியோகத் திட்டப்பணி மூலம் கிராமப்புற மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.