அமெரிக்காவின் பழங்குடியினர் பிரச்சினை
2022-05-05 19:34:45

மே 5ஆம் நாள் பழங்குடியினர்கள் காணாமல் போனது அல்லது கொல்லப்பட்டது தொடர்பான விழிப்புணர்வு தினத்தைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 5ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பின் போது பதிலளித்தார்.

பழங்குடியினர்களின் துன்பகரமான அனுபவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்கா நிறுவப்பட்டது. பழங்குடியினர் பிரச்சினை, அமெரிக்காவின் குற்றச் செயலால் ஏற்பட்டது. தன்னை தானே திறப்பு மற்றும் சுதந்திரமான நாடாக பறைசாற்றி வரும் அமெரிக்கா, இனவெறி பாகுபாட்டுக்குத் தீர்வு காணவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.