சீனாவின் இணையம் மற்றும் எண்ணியல் வளர்ச்சிக்குத் தடை செய்யும் அமெரிக்கா
2022-05-06 18:40:00

அமெரிக்கா தனது முன்னிலை மற்றும் ஏகபோக தகுநிலையை நிலைநிறுத்தும் விதம், விதிமுறைகளைப் பின்பற்றாமல், நேர்மையின்மை மற்றும் பொறுப்பற்ற முறையில் சீனாவின் இணையம் மற்றும் எண்ணியல் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 6ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற சாக்குப்போக்குகளுடன் சீன நிறுவனங்களை அமெரிக்கா ஆதாரமின்றி அடக்கி அவற்றின் மீது தடை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதோடு, தனது முதிர்ச்சியற்ற உற்பத்திப் பொருட்களை விற்க முயன்று வருகிறது. மேலும், இணையப் பிரச்சினையில் அமெரிக்கா சுயநலனுக்காக பிளவையும் பகைமையையும் ஏற்படுத்தி, மற்ற நாடுகளை அச்சுறுத்தி, சர்வதேச சமூகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதோடு, உலகளாவிய இணையவெளி மேலாண்மையை சர்வதேசச் சமூகம் முன்னேற்றும் முயற்சியையும் தடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.