குழுக்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் செயலுக்கு சீனா எதிர்ப்பு
2022-05-06 18:29:16

உக்ரைன் பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பவை 5ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சர்வதேச சமூகம் முழு முயற்சியுடன், போர் நிறுத்தத்தை முன்னேற்ற வேண்டும் என்றும், இம்மோதலால் ஏற்படும் மனித நேய பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் சீனாவின் பிரதிநிதி சாங் ஜுன் வேண்டுகோள் விடுத்தார்.

பனி போருக்கு பிறகு, கிழக்கு நோக்கி இடைவிடாமல் விரிவாக்கி வந்த நேட்டோ, ஐரோப்பாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பல மோதல்களையே ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் குழுக்களுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்தி, நெருக்கடி நிலைமையை உருவாக்கும் நேட்டோவின் செயலை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.