பிரதேச நெடுநோக்கின் நோக்கம், பரஸ்பர நலன் மற்றும் வெற்றியாகும்:வாங் யீ
2022-05-07 17:28:13

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, இந்தோனேசிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் லுஹுட் ஆகியோர் 6ஆம் நாள் காணொளி வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசியான் அமைப்பை மையமாகக் கொண்ட பிரதேச ஒத்துழைப்பு கட்டமைப்பு உருவாகியுள்ளது. கிழக்கு ஆசிய பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணுவதற்கான திறவுகோலகும். பிரதேச நெடுநோக்கை உருவாக்குவது, இழப்பு-லாபம் பெறும் ஒரு விளையாட்டு அல்ல. கூட்டு வெற்றி பெறுவதே அதன் இலக்காக இருக்க வேண்டும் என்றும் வாங் யீ வலியுறுத்தினார்.

ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம், இரு நாடுகள் தற்போதைய பல்வேறு இன்னல்களையும் அறைகூவல்களையும் கூட்டாகச் சமாளித்து வருகின்றன. இது, வளரும் நாடுகளின் ஒத்துழைப்புக்கு முக்கியமான வழிகாட்டலாக மாறியுள்ளது என்று லுஹுட் தெரிவித்தார்.