உக்ரைனுக்கான அமெரிக்க உதவி மசோதாவுக்கு தடை
2022-05-13 17:17:57

உக்ரைனுக்கான முன்பு கண்டிராத மதிப்புடைய உதவி மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை ஏற்றுக்கொள்வதை, குடியரசு கட்சியின் செனெட் அவை உறுப்பினர் ரான்ட் போல் தடை செய்துள்ளார். அவர் கூறுகையில், பண வீக்கத்தால் அமெரிக்கர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலதிக பணம் செலவிட்டு மக்களின் வேதனையைத் தீவிரமாக்க நாடாளுமன்றம் முயன்று வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஏப்ரல் 28ஆம் நாள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனித நேய உதவியை வழங்கும் வகையில், 3300 கோடி டாலர் அவசரக் கூடுதல் நிதிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அரசுத் தலைவர் பைடன் நாடாளுமன்றத்துக்கு எழுதிய கடிதத்தில் கோரினார். அதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் மனித நேய உதவிக்காக, மேலும் 680 கோடி டாலர் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இம்மசோதா ஏற்கனவே அமெரிக்க பிரதிநிதிகள் அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.