கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய உடனடித் தடை
2022-05-14 16:33:02

உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க, இந்திய மத்திய அரசு மே 13ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து அங்கீகாரம் பெற்ற நாடுகள் மட்டுமே தொடர்ந்து இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடியும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.