மே 16ம் நாள் முதல் ஷாங்காயில் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் வணிகச் சேவை
2022-05-15 18:40:38

ஷாங்காய் மாநகரில் நகரவாசிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அடிப்படையில் மே 16ஆம் நாள் திங்கள்கிழமை முதல், கடைகள் மற்றும் சந்தைகள் உள்பட வணிகச் சேவை படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று 15ஆம் நாள் ஷாங்காய் மாநகரின் கோவிட்-19 கட்டுப்பாட்டுப் பணி தொடர்பான செய்தியாளர்  கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அடுத்து, ஷாங்காய் முழுவதும், 10625 வணிகத்தளங்கள் படிப்படியாக சேவைக்கு வந்து, நாள்தோறும் 50லட்சம் முன்பதிவுகள் விநியோகம் செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.