தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி!
2022-05-15 20:42:27

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. 15ஆம் நாள் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த்து குறிப்பிடத்தகது.

அடுத்த முறை, தாமஸ் மற்றும் உபெர் கோப்பைப் போட்டிகள் 2024ஆம் ஆண்டு சீனாவின் செங்து நகரில் நடைபெறவுள்ளது.