அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியின் அபாயம் 'மிக மிக அதிகம்'
2022-05-16 10:14:59

பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்று உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி லாயிட் பிளாங்க்ஃபைன், மே 15ஆம் நாள் கூறினார்.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம், மிக மிக அதிகமாக இருக்கின்றது என்று பிளாங்க்ஃபைன் கருத்து தெரிவித்தார்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளைக் கொண்டிருந்தாலும், இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் நிலைமையை விரைவாக மாற்றுவது கடினம் என்று  கூறினார்.