சீனாவில் மின்னாற்றல் பயன்பாடு அதிகரிப்பு
2022-05-17 14:53:09

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் மே 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் பற்றிய சில தரவுகளை வெளியிட்டது.

இத்தரவுகளின்படி, ஜனவரி முதல் ஏப்ரல் திங்கள் வரை, சீனச் சமூகத்தில் மின்னாற்றல் பயன்பாட்டு அளவு கடந்த ஆண்டின் இதே  காலத்தில் இருந்ததை விட 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், சீனாவின் 14 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில் மின்னாற்றல் பயன்பாட்டின் அதிகரிப்பு விகிதம் 5 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. அவற்றில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும், ஜியாங்சி மாநிலத்திலும் இந்த விகிதம் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.