இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது!
2022-05-18 10:46:55

இலங்கையில் மே 9 ஆம் நாள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  செவ்வாய்க்கிழமை கைதி செய்யப்பட்டுள்ளனர். சனத் நிஷாநாத மற்றும் மிலன் ஜெயதிலக்க ஆகிய இந்த இருவரின் மீது குற்றப் புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்படும்.

இதே குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ நகர சபை ஊழியர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 சந்தேக நபர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு அரசுத் தலைமை வழக்கறிஞர் திங்கட்கிழமை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.