ஆர்சிஇபி உறுப்பு நாடுகளின் நிறுனங்களுக்குச் சேவைபுரியும் மையம் சான்யாவில் உருவாக்கம்
2022-05-22 16:48:16

2022ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கான ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுக மன்றக் கூட்டம் மற்றும் வணிகச் சூழல் மாநாடு மே 20ஆம் நாள் பிற்பகல் சான்யா நகரில் நடைபெற்றது. ஆர்சிஇபி நிறுவன சேவை மையமும், ஆர்சிஇபி உறுப்பு நாடுகளின் வணிகச் சேவை மையங்களும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

ஆர்சிஇபி உறுப்பு நாடுகளான சிங்கப்பூர், தென் கொரியா, கம்போடியா, மலேசியா, புருனே ஆகிய 5 நாடுகளின் சேவை மையங்கள் முதல் தொகுதியாக நிறுவப்பட்டுள்ளன. இனிமேல், இம்மையங்கள் மற்றும் ஆர்சிஇபி நிறுவன சேவை மையம், ஆர்சிஇபி உறுப்பு நாடுகளின் நிறுவனங்களுக்குத் துல்லியமான சேவைகளை வழங்கும். வெளிநாட்டுத் தூதரகங்கள், வணிகச் சங்கங்கள், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சான்யா நகரம் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ளவும், பொருளாதார வர்த்தகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும் அவை துணைபுரியும் அதேவேளை, சான்யாவுக்கும் உலகளாவிய வளங்களுக்கும் இடையேயான பன்முக ஆழமான இணைப்பையும் முன்னேற்றும்.