அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் நெடுநோக்கு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-05-22 19:17:10

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரியுடன் மே 22ஆம் நாள் சந்திப்பு நடத்தினார். இதற்கு பிறகு அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

அப்போது வாங்யீ கூறுகையில், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் நெடுநோக்கு உலகளவில் குறிப்பாக ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பல்வேறு நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரிவினையை உருவாக்கி, எதிரெதிர் நிலைமையைத் தூண்டி, அமைதியைச் சீர்குலைப்பது, இந்நெடுநோக்கின் சாராம்சமாகுமென உண்மைகள் நிரூபிக்கும் என்றார்.

மேலும், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டுக்கோப்பு குறித்து, வாங்யீ ஐயம் தெரிவித்தார். அத்துடன் அவர் 3 வரையறைகளை வழங்கினார். முதலாவதாக, தாராள வர்த்தகத்தை முன்னேற்ற வேண்டும். பாதுகாப்புவாதத்தை மேற்கொள்ளக் கூடாது. இரண்டாவதாக, உலகப் பொருளாதார மீட்சிக்குத் துணைப் புரிய வேண்டும். தொழிற்துறை சங்கிலியின் நிலைப்புத் தன்மையைச் சீர்குலைக்கக் கூடாது. மூன்றாவதாக, திறப்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும். புவியமைவில் எதிரெதிர் நிலைமையை உருவாக்கக் கூடாது என்று வாங்யீ தெரிவித்தார்.