பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை ஒத்துழைப்பு
2022-05-24 10:10:24

பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை இணையம் மற்றும் எண்ணியல் உற்பத்தி வளர்ச்சி மன்றம் சியாமன் நகரில் 23ம் நாள் நடைபெற்றது. உற்பத்தி தொழில் துறையின் எண்ணியல் மயமாக்க ஒத்துழைப்பு பற்றிய முன்மொழிவு எனும் ஆவணம் இம்மன்றத்தில் வெளியிடப்பட்டது.

நான்காவது தொழில்துறை புரட்சி ஆழமாக முன்னேறி வருகின்றது. எண்ணியல் மயமாக்கம், இணையத்தளமயமாக்கம் மற்றும் நுண்மதிமயமாக்கம் ஆகியவற்றை நோக்கி, உண்மையான பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது. விரைவான பொருளாதார மீட்சியை அடைவதே உடனடிக் கடமையாகும் என்று இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 23ஆம் நாள்  6ஆவது பிரிக்ஸ் நாடுகளின் தொழில் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் ஆறாவது பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தின் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறையில் பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, தொழில்துறை எண்ணியல் மயமாக்கத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் பரந்த ஒத்த கருத்து எட்டப்பட்டது என்றும், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, புதிய வளர்ச்சியை இணைந்து உருவாக்கப் பாடுபடுவோம் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.