அமெரிக்காவின் 7 மாநிலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்பு
2022-05-27 15:26:04

இந்த வாரம் வரை, அமெரிக்காவிலுள்ள 7 மாநிலங்களில் 9 குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உள்ளூர் நேரப்படி மே 26ஆம் நாள் அறிவித்தது.

தற்போது, கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, மாசசூசெட்ஸ், நியூயார்க், யூட்டா , வர்ஜீனியா, வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த மையத்தின் இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி செய்தியாளர் கூட்டத்தில் உறுதிப்படுத்தினார்.