பிரிக்ஸ் குடும்பத்தில் இணைய கூட்டாளிகளுக்கு சீனா வரவேற்பு
2022-05-27 17:30:07

பிரிக்ஸ் அமைப்பானது, புதிய வளர்ச்சி வாய்ப்பு பெற்ற சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்கான முக்கிய இயங்குமுறையும், தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையும் ஆகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். மேலும், இவ்வாண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் பதவியில் இருக்கும் சீனா, பிரிக்ஸ் நாடுகள் உறுப்பினர்களை அதிகரிக்கும் போக்கைத் தொடங்குவதற்கும், பிரிக்ஸ் மற்றும் ஒத்துழைப்பு மாதிரியை விரிவாக்குவதற்கும் ஆதரவளித்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ள மேலதிக கூட்டாளிகள் பிரிக்ஸ் குடும்பத்தில் இணைவதை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.