அசாமில் வெள்ளப்பெருக்கு – 30 பேர் உயிரிழப்பு
2022-05-28 18:42:01

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 30 பேர் உயிரிழந்துள்ளனர், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

வெள்ளப்பெருக்கால் 12 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை எப்போது சீராகும் எனத் தெரியவில்லை என்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

956 கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், 47 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டர் நிலப்பரப்பில் விளைந்த பயிர்கள் நாசமாகியுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 365 வெள்ள நிவாரண முகாம்களில் 13 ஆயிரத்து 988 சிறுவர்கள் உள்பட 66 ஆயிரத்து 836 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.