தொற்றுநோயில் அரசியல்
2022-05-29 15:44:32

அமெரிக்காவில் முதன்முறையாக கொவைட்-19 தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது, அப்போதைய அரசுத் தலைவர், வைரஸ் பரவுவதற்கு வழியில்லை என்றும் மறைந்து விடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறான கருத்தை தற்போதைய அரசுத் தலைவர் பைடன் கூறியுள்ளார். தற்போது, அமெரிக்கா மிக மோசமான ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. கொவைட்-19 பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சீரழிவுகள், தொற்றுநோயால் மட்டும்தான் ஏற்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.