அமெரிக்க தனிநபர் சேமிப்பு விகிதம் சரிவு
2022-05-31 09:41:17

ஃபோக்ஸ் வணிக செய்தி இணையதளம் 30ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்கர்களின் சேமிப்பு வழக்கம் குறைந்து வருகிறது. இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

அமெரிக்க வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி ஏப்ரல் திங்களில் அமெரிக்க பொது மக்களின் சேமிப்பு விகிதம் 4.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு மிக தாழ்வான பதிவு இதுவே ஆகும்.

அமெரிக்காவில் சி பி ஐ என்ற நுகர்வு விலை குறியீடு 40 ஆண்டுகளில் காணாத உயர்வான பதிவை எட்டியுள்ளதோடு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும்  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.