உக்ரைனின் தானிய ஏற்றுமதியை ரஷியா தடை செய்யாது:புதின்
2022-06-04 17:05:50

தற்போது தானியங்களை வேறு நாடுகளுக்கு ஏற்றிச்செல்லும் பல வழிகள் உக்ரைனுக்கு உண்டு. உக்ரைனின் தானிய ஏற்றுமதியை ரஷியா தடை செய்யாது என்றும், அடுத்த வேளாண் ஆண்டில் ரஷியாவின் கோதுமை ஏற்றுமதி அளவு 5கோடி டன் வரை அதிகரிக்கும் என்றும் ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின் 3ஆம் நாள் தெரிவித்தார்.

மேலை நாடுகளின் தடை நடவடிக்கையால், உலகளவில் தானியம் மற்றும் உரத்தின் விநியோகப் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்து வருகின்றது. அதோடு, ரஷியா அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென குற்றஞ்சாட்ட மேலை நாடுகள் முயன்று வருகின்றன என்றும் புதின் தெரிவித்தார்.