பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர்கள் மாநாடு இன்று இரவு துவக்கம்
2022-06-09 17:21:01

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்களிடையே 12ஆவது மாநாடு 9ஆம் நாளிரவு காணொலி வழியாக நடைபெறவுள்ளது என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷூ ஜுயேடிங் தெரிவித்தார்.  

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். எண்ணியல் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, விநியோக சங்கிலி ஒத்துழைப்பு, பலதரப்பு வர்த்தக அமைப்பு முறைக்கு ஆதரவு உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர்.