மே திங்கள் சீன நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 2.1% அதிகரிப்பு
2022-06-10 16:39:38

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டின் மே திங்கள், சீனாவின் நுகர்வோர் விலைவாசிக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 2.1விழுக்காடு அதிகமாகும். அவற்றில் உணவுப் பொருட்களின் விலைக் குறியீடு 2.3விழுக்காடும், உணவு சாரா பொருட்களின் விலைக் குறியீடு 2.1விழுக்காடும் அதிகரித்துள்ளன.

மேலும், இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீன நுகர்வோர் விலைவாசிக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 1.5விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.