இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இயற்கை சீற்றம்
2022-06-10 10:39:31

இந்தியாவின் வடக்கிழக்கிலுள்ள மேகாலயா மாநிலத்தில் ஜுன் 9ஆம் நாள் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும், அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக பெய்த புயல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் புயல் மழை ஜுன் 12ஆம் நாள் வரை நீடிக்கும் என்று உள்ளூர் வானிலை நிலையம் மதிப்பீடு செய்துள்ளது.