19ஆவது ஷங்ரி-லா பேச்சுவார்த்தை
2022-06-11 16:53:41

19ஆவது ஷங்ரி-லா பேச்சுவார்த்தை 10ஆம் நாள் சிங்கப்பூரில் துவங்கியது. 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 500 அதிகாரிகளும் அறிஞர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்களில், அமைச்சர் நிலை பிரதிநிதிகளும் உயர் நிலை தேசியப் பாதுகாப்பு பிரதிநிதிகளும் அடக்கம்.

அழைப்பின் பேரில் கலந்துகொண்ட சீன அரசவை உறுப்பினரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபெங் ஹெ பிரதேச ஒழுங்கு குறித்த சீனாவின் விருப்பம் என்ற தலைப்பில் 12ஆம் நாள் இப்பேச்சுவார்த்தையில் உரை நிகழ்த்த உள்ளார்.

இப்பேச்சுவார்த்தை காலத்தில் தொடர்புடைய நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்களை வெய் ஃபங் ஹெ சந்தித்து, சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை பற்றியம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்.