குரோஷியாவில் யூரோ பயன்பாட்டிற்கு நிதி அமைச்சர்கள் ஆதரவு
2022-06-17 11:36:59

குரோஷியாவில் யூரோ பயன்பாடு குறித்து யூரோ பிரதேச நாடுகளின் 19 நிதி அமைச்சர்கள் வழங்கிய முன்மொழிவு, 16ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இம்முன்மொழிவின்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் முதல் குரோஷியாவில் யூரோ பயன்படுத்தப்படும். குரோஷியா, யூரோ பிரதேசத்தின் 20ஆவது உறுப்பு நாடாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

மதிப்பிடப்பட்ட நாடுகளில், நிலையான விலைவாசி, பொது நிதி, பண மாற்று விகிதம், நீண்டகால வட்டி விகிதம் ஆகியவை தொடர்பான 4 வரையறைகளுக்குப் பொருந்திய ஒரே நாடு, குரோஷியா ஆகும் என்று ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையில், குரோஷியாவில் யூரோ பயன்பாட்டுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படவுள்ளது என்று தெரிகிறது.