ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கம்
2022-06-22 18:12:25

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாநிலத்தில் 22ஆம் நாள் விடியற்காலை ரிக்டர் அளவு கோலில் 5.9ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 280 பேர் உயிரிழந்தனர். 595 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆப்கானிஸ்தானின் பக்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, அண்டை மாநிலமான பாக்டிகா மாநிலம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 255 பேர் உயிரிழந்தனர். தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசகளுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புதவி குழுக்கள் சென்றடைந்துள்ளன.