பாகிஸ்தானுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே உதவித் திட்டம்
2022-06-28 20:30:07

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை குறிப்பாணை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது என்ற செய்தியை பாகிஸ்தான் நிதி துறை அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் ஜுன் 28ஆம் நாள் உறுதி செய்தார். 600கோடி அமெரிக்க டாலர் உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது பற்றி பாகிஸ்தானும் சர்வதேச நாணய நிதியமும் உடன்படிக்கையை உருவாக்குவதற்கு, இது ஒரு முக்கிய காலடியாகும் என்று கருதப்படுகின்றது.

தற்போது, இந்த உதவித் திட்டம் குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன. மேலும், 2022 முதல் 2023ஆம் நிதியாண்டுக்கான பாகிஸ்தான் அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்து இரு தரப்பும் ஒத்த கருத்துக்கு வந்துள்ளன.