நேட்டோ புதிய பனிப்போரைத் தொடுக்கக் கூடாது:சீனா
2022-06-29 11:39:23

நேட்டோ அமைப்பு, உக்ரைன் மோதலைச் சாக்குப்போக்காகக் கொண்டு, புதிய பனிப்போரைத் தொடுத்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் வேண்டுமென்றே முரண்பாடு மற்றும் பிரிவினையை உருவாக்கக் கூடாது என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநித ச்சாங் ஜுன் 28ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஆசிய-பசிபிக் விவகாரங்களில் நேட்டோ தலையிட சில சக்திகள் ஊக்குவிப்பதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள், கஷ்டப்பட்டு நாடிப் பெற்ற அமைதி மற்றும் செழுமை நிலைமையைப் பேணிமதித்து, பரஸ்பர நலன்களையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.