ஷி ச்சின்பிங் உரைக்கு பல நாட்டுப் பிரமுகர்களின் பாராட்டு
2022-07-03 16:36:00

ஹாங்காங் தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6வது அரசின் பதவி ஏற்பு விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். இது குறித்து, பிரிட்டன், புருணை, துருக்கி, கென்யா, நியூசிலாந்து, மெக்சிகோ, பிரேசில், வெனிசூலா, ஜெர்மனி, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்காளத்தேசம், ரஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பிரிட்டனின் 48 குழு மன்றத்தின் தலைவர் கூறுகையில், சீனா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார அதிகரிப்புக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனா 30 விழுக்காடு வகிக்கிறது. சீனாவின் முக்கிய ஒரு பகுதியான ஹாங்காங், முக்கிய பங்காற்றி வருகிறது என்றார்.

ஹாங்காங்கிலுள்ள வங்காளத்தேச வணிகச் சங்கத்தின் தலைமை இயக்குநர் மசூத் தெரிவிக்கையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை, வளர்ச்சி மீதான பல்வேறு துறைகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஹாங்காங், சீரான வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கத் துவங்கியது என்றார்.