சர்வதேச சமூகம் தலிபான் அரசவை அங்கீகரிக்க வேண்டும்-ஆப்கான் பேரவை வேண்டுகோள்
2022-07-03 16:35:18

ஜுலை 2ஆம் நாள் நிறைவுற்ற ஆப்கான் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில், டைந்தது. அதில், தலிபான் உருவாக்கிய தற்காலிக அரசை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அண்டை நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிக்க ஆப்கான் விரும்புகின்றது. எந்த நாடுகளை எதிர்ப்பதிலும் ஆப்கானின் தேசிய நிலம் பயன்படுத்தப்படாது. மற்ற நாடுகள், தனது உள் விவகாரத்தில் தலையீடு செய்வதற்கு ஆப்கான் அனுமதிக்காது என்று இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஐ எஸ் என்ற தீவிரமான அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இத்தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கசகசாச்செடி பயிரிடுதலையும் போதை பொருள் கடத்தலையும் ஒழிக்கும் ஆப்கான் தற்காலிக அரசுக்கு இத்தீர்மானம் ஆதரவு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.