ஆப்கானுக்கான சீனாவின் மீட்புதவி பொருட்கள்
2022-07-04 17:29:23

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு சீன செஞ்சிலுவை சங்கம் கொடுத்த மீட்புதவி பொருட்களின் ஒப்படைப்பு விழா, 3ஆம் நாள், காபுலிலுள்ள ஆப்கான் செம்பிறை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. சீன தூதர் வாங் யூவும், இச்சங்கத்தின் தலைவர் ஹாரிஸும் இதில் கலந்துகொண்டனர்.

ஆப்கானில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் சீனா உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. ஜுன் 30ஆம் நாள் சீன செஞ்சிலுவை சங்கம், ஆப்கானுக்கு மீட்புதவி பொருட்களை அனுப்பி, ஆப்கான் செம்பிறை சங்கத்துக்கு நிதியுதவி அளித்துள்ளது. சீனா ஆப்கானுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, நில நடுக்க மீட்புதவி பணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று வாங் யூ தெரிவித்தார்.

சீனா அளித்த உதவிக்கு ஆப்கான் நன்றி தெரிவிக்கிறது என்று ஹாரிஸ் தெரிவித்தார்.