சீன-இலங்கை ஒத்துழைப்பு
2022-07-05 16:42:26

இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும், நாட்டின் தலைமையமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கே, ஜூலை 4ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவுடன் காணொளி வழியாகத் தொடர்புக் கொண்டார். இரு கட்சிகளுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, சீன-இலங்கை பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்றுவது முதலியவை குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.