டோக்கியோவில் ஜூனில் 42பேர் வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு
2022-07-05 11:34:59

ஜூன் மாதத்தின் பின்பாதி முதல் ஜப்பானின் பல பகுதிகளில் வெப்பநிலை தீவிரமாக அதிகரித்துள்ளது. டோக்கியோவில் பல நாட்களாக தொடர்ந்து கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. அந்நாட்டுச் செய்தி ஊடகம் ஜூலை 4ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, ஜூன் மாதம் டோக்கியோவில் 42பேர் அதிக வெப்ப தாக்கத்தால் உயிரிழந்தனர் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25முதல் ஜூலை 3ஆம் நாள் வரை, டோக்கியோவில் தொடர்ச்சியாக அதிக வெப்பநிலை பதிவாகியது.