சீனா பற்றிய பிளிங்கனின் கூற்று உண்மைக்குப் புறம்பானது
2022-07-06 17:46:18

சீனா பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் நிகழ்த்திய உரை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 6ஆம் நாள் கூறுகையில், உண்மைக்குப் புறம்பான இவ்வுரையில், நிறைய பனிப்போர் சிந்தனை மற்றும் சித்தாந்தம் சார் பாகுபாடு உள்ளன. இதனை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், பிளிங்கன் தனது உரையில் நேட்டோ மோதலை தேடவில்லை என்று கூறினார். இது போலித்தனமாகவும் உண்மைக்குப் பொருத்தமற்றதாகவும் உள்ளது. நேட்டோவின் வரலாறு, மோதல்கள் மற்றும் போர்களை ஏற்படுத்திய வரலாறு ஆகும். நேட்டோவுக்கு சீனா சவாலாக இல்லை. நேட்டோ தான், உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு சவாலாக மாறி வருகிறது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தைக் குழப்பமாக்கும் சூழ்ச்சியை நேட்டோ கைவிட வேண்டும். சீனா பற்றிய அறிவுகளை அமெரிக்கா சரி செய்து, மோதல் மற்றும் எதிரெதிர் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.