பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் ஜான்சன் பதவி விலகல்
2022-07-08 16:04:04

பிரிட்டன் தலைமை அமைச்சர் போரிஸ் ஜான்சன் 7ஆம் நாள் லண்டனின் டவுங்னி தெருவிலுள்ள இல்லத்துக்கு முன் உரை நிகழ்த்துகையில், ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தலைமை அமைச்சராகப் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். கன்சர்வேடிவ் கட்சித் தலைவரின் தேர்தல் நடத்தப்படும் நேரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.