ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் மீதான துப்பாக்கி சூடு
2022-07-08 17:12:25

ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே 8ஆம் நாள் நாரா நகரின் தெருவில் உரை நிகழ்த்திய போது துப்பாக்கியால் சுடப்பட்டு தரையில் விழுந்தார். மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பப்பட்ட வழியில் அவரது இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு நின்று விட்டதாக உள்ளூர் தீயணைப்பு துறையின் தகவலை மேற்கோள்காட்டி ஜப்பானின் செய்தி ஊடகம் தெரிவித்தது.

ஜப்பானின் தலைமை அமைச்சர் கிஷிடா ஃபுமியோ இத்தகவலை அறிந்து கொண்ட பிறகு தேர்தலுக்கான பிரச்சாரப் பயணத்தை நிறுத்தி வெளியூரிலிருந்து டோக்கியோவுக்குத் திரும்பினார். தற்போது அபேவின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது என்று அவர் தலைமை அமைச்சர் இல்லத்தில் ஊடகங்களிடம் கூறியதோடு, தேர்தல் போக்கில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இத்துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் காவற்துறையால் கைது செய்யப்பட்டார். நாரா நகரைச் சேர்ந்த அவர், ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையில் 3 ஆண்டுகள் சேவைபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.