திபெத்தில் புதிய அருங்காட்சியகம் திறப்பு
2022-07-09 16:40:51

திபெத் அருங்காட்சியகத்தின் புதிய காட்சியகத் திறப்பு விழா ஜுலை 8ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. 65ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவுள்ள இக்காட்சியகத்தில் சுமார் 5.2 இலட்சம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 ஆயிரம் பொருட்கள் மதிப்புக்குரியவை. திபெத்தில் சேகரிப்பு, காட்சிப்படுத்துதல், ஆய்வு, கல்வி மற்றும் சேவை செயல்திறனங்களைக் கொண்ட ஒரே ஒரு தேசிய முதல்தர நவீன அருங்காட்சியகம் இதுவாகும்.

2017 அக்டோபரில் அருங்காட்சியகத்தின் விரிவாக்கத் திட்டப்பணி துவங்கியது. இதற்கு மொத்தம் 66 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.