சீன மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2022-07-09 19:44:44

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 9ஆம் நாள் பாலி தீவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் விரிவான முறையிலும் ஆழமாகவும் ஆலோசனை நடத்தினர்.

சீனாவின் மீது அமெரிக்காவின் கொள்கைகளிலுள்ள சில முரண்பாடுகள் காரணமாக, தற்போது சீன-அமெரிக்க உறவு அதிக அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளது என்று வாங் யீ தெரிவித்தார்.

 சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்துவது சீன-அமெரிக்க உறவு சிக்கலில் இருந்து விடுவிப்பதற்கு அடிப்படையாகும். மூன்று கூட்டு அறிக்கைகளில் இரு நாடுகளும் அளித்துள்ள வாக்குறுதிகளைப் பயனுள்ள முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்புகளின் இடர்பாட்டுக் காரணிகளை அமெரிக்கா கட்டுப்படுத்தப் பாடுபட்டு, சீனாவுடன் திறந்த மனதுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று பிளிங்கன் தெரிவித்தார்.