பாலஸ்தீன அரசுத் தலைவர்-இஸ்ரேல் தலைமையமைச்சர் தொடர்பு
2022-07-10 16:55:36

பாலஸ்தீன அரசுத் தலைவர் அபாஸ் 8ஆம் நாள் இஸ்ரேல் தலைமையமைச்சர் லாபிட்டுடன் தொலைப்பேசி மூலம் உரையாடினார். கடந்த 5 ஆண்டுகாலத்தில், அபாஸ் இஸ்ரேல் தலைமையமைச்சருடன் மேற்கொண்ட முதலாவது தொடர்பு இதுவாகும். அவர்கள், இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, இரு தரப்பும் கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவதன் அவசியம் முதலியன குறித்து விவாதித்தனர் என்று இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன.

இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தை 2014இல் முறிந்தது. அது, தற்போதுவரை மீட்டெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.