சீனா-அமெரிக்காவுக்குமிடையில் தொடர்பை நிலைநிறுத்துவது முக்கியம்:சீன வெளியுறவு அமைச்சகம்
2022-07-11 20:03:30

அமெரிக்க அரசுத் தலைவரும் சீன அரசுத் தலைவரும் அடுத்த சில வாரங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா கருதுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பிங் 11ஆம் நாள் கூறுகையில்,

சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களுக்கிடையில் பரிமாற்றத்தை நிலைநிறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி இரு தரப்புகளும் தூதாண்மை வழிமுறையில் கூட்டாகத் தீர்மானம் செய்யும். அதற்காக உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் பாடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.