சின்ஜியாங்கில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்
2022-07-14 16:56:37

சீனாவின் சின்ஜியாங்கில் குர்பான் திருவிழா காலத்தின் போது, பயணித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88 இலட்சத்து 57 ஆயிரம் 800 ஆகும். சுற்றுலா வருமானம், 688.1 கோடி யுவானாகும். ஜூன் இறுதியில், சின்சியாங்கில் சுற்றுலா மேம்பாட்டு மாநாடு நடைபெற்றது. மே திங்களில், 5 ஏ நிலை சுற்றுலாத் தலங்களில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு 19 ஆயிரமாகும். ஜூலையில், நாளுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.